×

பல்வேறு போட்டிகளில் வென்ற 442 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.80 லட்சம் பரிசுத்தொகை

 

கிருஷ்ணகிரி, மார்ச் 16: கிருஷ்ணகிரியில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 442 மாணவ, மாணவிகளுக்கு, ரூ.9.80 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி, கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.கிருஷ்ணகிரியில், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பேச்சு மற்றும் கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி -கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சரயு தலைமை வகித்து, 442 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.80 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசியதாவது:
கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் வினாடி-வினா, கபடி, கைபந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

கல்லூரி அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 64 மாணவ, மாணவிகளுக்கு, ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகையும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 78 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.90 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகையும், பள்ளி அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 204 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.40 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகையும் என மொத்தம் 442 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.80 லட்சம் மதிப்பில் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

The post பல்வேறு போட்டிகளில் வென்ற 442 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.80 லட்சம் பரிசுத்தொகை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Muthamizhari ,
× RELATED கெலமங்கலம் அருகே மாட்டுத்தீவனம்...